நேர்ச்சை

நபிகள் (ஸல்) அவர்கள் அறிவித்துள்ளதாக பல ஹதீத்களில் பதிவாகி உள்ளதாவது, “நேர்ச்சை செய்வது ஒரு விரும்பத்தகாத (மக்ரூஹ்) காரியமாகும்! அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் “ நீங்கள் நேர்ச்சை வைக்க வேண்டாம் ஏனெனில் இந்த நேர்ச்சை , இந்த நேர்ச்சை வைக்கக் கூடிய “கருமிக்கு” சில சிலவுகளை ஏற்படுத்துமே தவிர நேர்த்திகள் அவனது விதியை (கத்ர்) சிறிதளவும் மாற்றாது! (​முஸ்லிம்)

“அப்துல்லாஹ் இப்ன் உமர் (ரலி) அறிவிக்கிறார்கள் ” அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நாம் நேர்ச்சை வைப்பதனை இட்டு அதிருப்தி அடைவார்கள், மற்றும் சொல்வார்கள் இந்த நேர்ச்சை, இந்த நேர்ச்சை வைக்கக் கூடிய கருமிக்கு சில சிலவுகளை ஏற்படுத்துமே தவிர நேர்ச்சை எதனையும் மாற்றி விடாது. (புஹாரி – முஸ்லிம்)

சிலர் கேட்கலாம் ஏன் நேர்ச்சை கடன்களை வைப்பது ஊக்குவிக்கப் படாத அதே வேலை அல்லாஹ் (ஸுப்ஹானஹுவதாலா) நேர்ச்சை கடன்களை நிறைவேற்றுவோரை புகழ்கின்றான்! இதற்கான பதில் , எவ்வகையான நேர்ச்சை கடன்களை நிறைவேற்றுபவர்களை அல்லாஹ் (ஸுப்ஹானஹுவதாலா) புகழ்கின்றான் என்றால், யார் ஒருவர் ஒரு கட்டாயமாக்கப் படாத, நன்மையான காரியத்தை எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் (உதாரணமாக இப்படி நடந்தால் இதனைச் செய்வேன் என்று இல்லாமல்) அல்லாஹ்விற்காக செய்ய நினைத்து அதனை நிறைவேற்றுவாரோ, அவரையே அல்லாஹ் (ஸுப்ஹானஹுவதாலா) தனது திருக் குர்ஆனில் புகழ்கின்றான். இந்த வகையில் நேர்ச்சை வைப்பவர்கள் தாம் அலுப்படையாமல் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மாத்திரம் நாடி , கட்டாயமாக்கப்படாத காரியங்களை அல்லாஹ்விற்காக செய்பவர்களாவார்கள். இதுபோல் ஊக்குவிக்கப்படாத நேர்ச்சை ஆவது அல்லாஹ்விடம் எதாவது தனக்கு ஆகவேண்டிய காரியத்தை ஆக்கித் தருமாறு வேண்டி அப்படி ஆகுமே ஆனால் அதற்கு ஈடாக சில சில நன்மையான காரியங்களை செய்வதாக நேர்ச்சை வைப்பதாகும், இதே சமயம் அந்தக் காரியம் நிறைவடையா விட்டால் இம்மனிதன் அந்த நேர்ச்சையை நிறைவேற்ற மாட்டான்..! இவர்கள் அல்லாஹ் (ஸுப்ஹானஹுவதாலா) எந்த ஒரு தேவையும் அற்றவன் என்று உணர மறந்து விட்டார்கள்.

மேலும் கவனிக்க வேண்டியவைகள்

இப்படி நேர்ச்சை வைத்துக் கொண்ட ஒருவர் அந்த நேர்த்தியை நிறைவேற்றும் போது ஒரு கடனைக் கழிப்பது போன்ற உணர்வே அவருக்கு ஏற்படுகின்றது, வணக்கம் என்பது (இக்ஹ்லாஸ் ) உடன் செய்யக் கூடிய ஒரு அம்சமாகும்.

ஒரு நேர்ச்சை வைத்தவர் அதனை நிறைவேற்ற கடமைப் பட்டுள்ளதன் காரணமாக அந்த நேர்த்திக் கடனை அலட்சியமாகவும் நிறைவேற்ற முற்படுவார்.

சில மனிதர்கள் மூடத் தனமாக நினைக்கிறார்கள் நேர்ச்சை வைத்துக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் (ஸு.தா) தனது தேவையை நிறை வேற்றி விடுவான் என்று.

மற்றுமொரு முட்டாள் தனமான நம்பிக்கை என்னவென்றால், நேர்ச்சை ஒருவனின் விதியை (கலா-கத்ர்) மாற்றி விடும் அல்லது உடனடியான ஒரு நன்மையைக் கொண்டு வந்து சேர்க்கும் இல்லாவிடின் ஒரு ஆபத்தை தடுத்து நிறுத்தும் என்று நம்புவதாகும்; மேற்குறிப்பிட்டுள்ள மூட நன்பிக்கைகளில் இருந்து மக்களை தடுக்கும் காரணமாகவும் தான் நேர்ச்சை ஒரு விரும்பத் தகாத ஒன்றாக கருதப்படுகிறது.

அனைத்து நேர்ச்சைகளும் கட்டாயமாக நிறைவேற்றப்பட வேண்டும்

(ஒரு வணக்கத்தை செய்ய நேர்ச்சை வைப்பதும் அல்லாஹ்வுக்கு அடிபணிதலும்)

அனைத்து நேர்ச்சைகளும் அல்லாஹ்விடம் ஒரு வாக்குறுதியை கொடுத்துள்ளதாகவே இருக்கிறது, அவையாவன தொழுகை, நோன்பு, உம்ரா அல்லது ஹஜ், குடும்பங்களுடன் சேர்ந்துருப்பது, இஹ்திகாப், ஜிஹாத், நன்மைகளை ஏவியும் தீமைகளை தடுப்பது போன்றவைகளாகும். உதாரணமாக ஒரு மனிதன் கூறலாம் “அல்லாஹ் தனக்கு சில காரியங்களை நிறைவேற்றித் தரும் பட்சத்தில் அல்லது ஒரு நோயாளியை குணப்படுத்தும் பட்சத்தில் அவர் இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நோன்பு வைப்பேன் அல்லது குறிப்பிட்ட அளவு தானம் செய்வேன் அல்லது உம்ராவையோ ஹஜ்ஜையோ நிறைவேற்றுவேன் அல்லது புனித ஹரம் ஆலயத்தில் (மக்காவில்) குறிப்பிட்ட அளவு தொழுவேன் அல்லது இது போன்று ஏதாவது.”

நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “எவரேனும் சில நன்மையான விடயத்தை செய்து அல்லாஹ்வுக்கு அடிபடிவதாக ஒரு நேர்ச்சையை வைப்பாரே ஆனால் அவர் அதனை நிறைவேற்றட்டும்” (புஹாரி – 6202)

நேர்ச்சையை வைத்த ஒருவரின் சந்தர்ப்ப சூழ்நிலைகள் தனது நேர்சையை நிறைவேற்ற முடியாமல் செய்யுமானால், (உதாம்: நோன்பு , ஹஜ்ஜ, உம்ரா மேலும் எதுவானாலும்) அவர் அதற்கு, அந்த நேர்ச்சையை நிறைவேற்ற முடியாததின் பிராயச்சித்தமாக (கபாரத் யமீன்) செய்ய வேண்டும், (“கபாரத் யமீன்” இது வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போனதற்கான பிராயச்சித்தமாகும்),

கபாரத் யமீன் அல்லாஹ்வினால் கீழ் கண்டவாறு குர்ஆனில் அறிவிக்கப்படுகிறது

உங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைக் தண்டிக்க மாட்டான்; எனினும் (ஏதாவது ஒன்றை) உறுதிப்படுத்தச் செய்யும் சத்தியங்களுக்காக மீறினால் உங்களை தண்டிப்பான்; (எனவே சத்தியத்தை முறித்தால்) அதற்குரிய பரிகாரமாவது: உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் ஆகாரத்தில் நடுத்தரமானதைக் கொண்டு பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது அவர்களுக்கு ஆடை அணிவிக்க வேண்டும், அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; ஆனால் (இம் மூன்றில் எதனையும்) ஒருவர் பெற்றிராவிட்டால் (அவர்) மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்; நீங்கள் சத்தியம் செய்யும் பொழுது இதுவே உங்கள் சத்தியங்களின் பரிகாரமாகும்; உங்கள் சத்தியங்களை (முறித்து விடாமல்) பேணிக் காத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அவன் தன் அத்தாட்சிகளை – ஆயத்களை – உங்களுக்கு இவ்வாறு விளக்குகிறான். (அல்-மாஇதா – 5:89)

இப்ன் அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள் ஒரு நேர்ச்சையை நிறைவேற்ற முடியாமல் போனவருக்கான பிராயச்சித்தம் பிராயச்சித்தமாகும் (கபராத் யமீன்) – ஆதாரம் அபு தாவூத். அல் ஹாபித் இப்ன் ஹஜர் புலூஹ் அல் மராமில் கூறுகிறார்கள் இந்த ஹதீத் சஹீஹ் என்று ஷேய்க் அல் இஸ்லாம் இப்ன் தய்மியாஹ் அல் பதாவா (33/49) இல் கூறுகிறார்கள், பெரும்பான்மையான நபித் தோழர்களின் அபிப்பிராயத்தின் படி ஒரு மனிதன் ஒரு நேர்ச்சையை வைத்தால் அதனை நிறைவேற்ற வேண்டும், அது முடியாமல் போனால் அதன் பிராயச்சித்தம் “கபராத் யமீன்” ஆகும் (மேலே இதனை விளக்கி உள்ளோம்)

பூர்த்தி செய்வதனை தடுக்கப்பட்டுள்ள நேர்ச்சைகளுக்காக பிராயச்சித்தம் “கபராத் யமீன்” ஆகும்

இந்த வகையான நேர்ச்சைகள் பல வகைப்படும்

ஒரு பாவகாரியத்தை செய்வதாக நேர்ச்சை வைப்பது

இவ்வகையான நேர்ச்சை அல்லாஹ்வுக்கு அடிபடியாமை ஆகும், உதாரணமாக ஒரு கல்லறைக்கு (கப்ருக்கு) எண்ணையோ விளக்கோ அல்லது காணிக்கையாக பணமோ கொண்டு வருவதாக நேர்ச்சை செய்வது, அல்லது ஒரு ஒரு “சிர்க்குகள்” நடைபெறும் அடக்கஸ்தலத்தை கண்ணியத்துக்கு உரிய இடமாக ஏற்று அதனை தரிசிப்பதாக நேர்ச்சை செய்வது, இது ஒரு வகையில் சிலைகளுக்காக நேர்ச்சை செய்வதற்கு ஈடாகும். அத்தோடு சில பாவ காரியங்களை செய்வதாக நேர்ச்சை வைத்து அவைகளை நிவர்த்தி செய்வதும் தடுக்கப்பட்டுள்ளது, உதாரணமாக, தகாத உடலுறவு, மது அருந்துவது, களவு, அனாதைகளின் சொத்துக்களை அபகரிப்பது மற்றும் இன்னொருவரின் உரிமையை மீறல், சொந்தங்களை துண்டிப்பது அல்லது காரணமில்லாமல் ஒருவரின் வீட்டுக்கு செல்லாமல் இருப்பது..இவைகள் எதனையும் அனுமதிடிக்கப் படவில்லை மேற்குறிப்பிட்ட விதத்தில் எவராவது ஒரு நேர்ச்சையை செய்வாரானால் அவர் அந்த நேர்ச்சைகளுக்கான பிராயச்சித்தமாக “கபராத் யமீன்” செய்ய வேண்டும்.

மேற்குறிப்பிட்ட விதத்தில் எவராவது ஒரு நேர்ச்சையை செய்வாரானால் அவர் அந்த நேர்ச்சைகளுக்கான பிராயச்சித்தமாக “கபராத் யமீன்” செய்ய வேண்டும். இதற்கான ஆதாரம், அண்ணை ஆயிஷா (ரஅ) நபியவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார்கள் “எவரேனும் அல்லாஹ்வுக்கு அடிபணிந்து ஒரு நன்மையான காரியத்தை செய்வதாக நேர்ச்சை செய்தால் அதனை நிறைவேற்றட்டும், எவரேனும் ஒருவர் ஒரு பாவமான காரியத்தை செய்வதாக நேர்ச்சை செய்தால் அதனை செய்வதனில் இருந்து அவர் விலகிக் கொள்ளட்டும் ” (புஹாரி)

இம்ரான் இப்ன் ஹுசைன் நபியவர்கள் (ஸல்) கூறியதாக அறிவிக்கிறார்கள், “பாவங்களைக் கொண்ட எந்த ஒரு நேர்சையையும் நிறைவேற்றக் கூடாது”

பாவங்கள் செய்ய நேர்ச்சை செய்வது: குர்ஆனுக்கோ அல்லது நபி (ஸல்) அவர்களின் போதனை செயல்களுக்கு எதிராக நேர்ச்சை செய்வது .

ஒரு முஸ்லிம் ஒரு நேர்ச்சையை வைத்ததின் பின் அந்த நேர்ச்சை குர்ஆனுக்கோ அல்லது நபி (ஸல்) அவர்களின் போதனைகளுக்கு எதிராக இருக்கிறது என்று விளங்கிக் கொண்டால், இவ்வகையான நேர்ச்சைகளை நிறைவேற்றுவதனைக் கொண்டும் அவர் தவிர்ந்து கொள்ள வேண்டும். அந்த நேர்ச்சைகளுக்கான பிராயச்சித்தமாக “கபராத் யமீன்” செய்ய வேண்டும். இதற்கான ஆதாரம் Zசியாத் இப்ன் Jசுபைர் கூறுகிறார்கள், நான் ஒரு முறை இப்ன் உமரோடு இருந்தேன் அப்போது ஒரு மனிதன் அவரிடம் கேட்டார் ” நான் எனது உயிர் உள்ளவரை ஒவ்வொரு கிழமையிலும் செவ்வாய் அல்லது புதன் நாட்களில் நோன்பு இருப்பதாக நேர்ச்சை வைத்துக் கொண்டுள்ளேன், ஆனால் இன்றைய தினம் ஈத் உல் அல்ஹா (பெருநாள்) வாக இருக்கிறதே, இதற்கு இப்ன் உமர் கூறினார் அல்லாஹ் நேர்ச்சைகளை நிறைவேற்றுமாறு கூறியுள்ளான் அதே வேளை குர்பானியுடைய தினத்தில் நோன்பிருப்பதனையும் தடுத்துள்ளான், அத்தோடு அவர் (இப்ன் உமர்) சொன்னார் அளவுக்கு அதிகமாகவும் இல்லை குறைவாகவும் இல்லை ” (புஹாரி 6212)

இமாம் அஹ்மத் அறிவிக்கிறார்கள் சியாத் இப்ன் சுபைர் கூறியதாக ஒரு மனிதர் இப்ன் உமரிடம் (ரஅ) அவர் மினாவில் நடந்து கொண்டிருக்கும் போது வினவினார் ” நான் ஒவ்வொரு கிழமையிலும் செவ்வாய் அல்லது புதன் நாட்களில் நோன்பு இருப்பதாக நேர்ச்சை வைத்துக் கொண்டுள்ளேன், ஆனால் இன்றைய தினம் ஈத் உல் அல்ஹா (பெருநாள்) வாக இருக்கிறதே, இதில் உங்களின் கருத்து என்ன என்று” அதற்கு அவர் அல்லாஹ் நேர்ச்சைகளை நிறைவேற்றுமாறு கூறியுள்ளான் அதே வேளை நபிகள் நபியவர்கள் (ஸல்) பெருநாள் தினங்களில் நோன்பு நோட்பதனை தடுத்துள்ளார்கள், இவ்வாறு இந்த உரையாலாடை மீனாவின் குன்றை அடையும் வரை தொடர்ந்தார்கள்.

அல் ஹாபித் இப்ன் ஹஜர் கூறினார்கள் “மார்க்க அறிஞர்கள் பெருநாள் தினங்களில் நோன்பிருக்க கூடாது என்பதனை ஏக மனதாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள், அந்த நோன்பு ஒரு வணக்க வழிபாடாகவோ, அல்லது ஒரு நேர்ச்சையை நிறைவேற்ற வேண்டுமானாலும் கூட அதனை செய்யக் கூடாது ”

“கபராத் யமீன்” (நேர்ச்சையை நிறைவேற்ற முடியாமைக்கான பிராயச்சித்தம்) மாத்திரமே செய்யக் கூடிய நேர்ச்சைகள்.

அவையாவன:

“நிர்ணயிக்கப்படாத நேர்ச்சைகள் ”

ஒரு முஸ்லிம் ஒரு நேர்ச்சையை வைக்கிறார், ஆனால் அவர் அதன் விளைவாக எதனைச் செய்வதென்று குறிப்பிட வில்லை, உதாரணமாக “நான் அல்லாஹ்விடம் இந்த நோயை குணப்படுத்தித் தருமாறு நேர்ச்சை வைக்கிறேன்”, ஆனால் அவர் அப்படி நடந்தால் எதனையும் செய்வதாக குறிப்பட வில்லை, இந்த சந்தர்ப்பத்தில் இவர் “கபராத் யமீன்” செய்ய வேண்டும். உக்பா இப்ன் ஆமிர் நபிகள் (ஸல்) அறிவித்ததாக கூறுகிறார்கள் நேர்ச்சையை நிறைவேற்ற முடியாமைக்கான பிராயச்சித்தம் “கபராத் யமீன்” ஆகும் (முஸ்லிம்)

ஒரு முஸ்லிம் ஒரு நேர்ச்சையை வைக்கிறார், ஆனால் அவர் அதன் விளைவாக எதனைச் செய்வதென்று குறிப்பிட வில்லை, உதாரணமாக “நான் அல்லாஹ்விடம் இந்த நோயை குணப்படுத்தித் தருமாறு நேர்ச்சை வைக்கிறேன்”, ஆனால் அவர் அப்படி நடந்தால் எதனையும் செய்வதாக குறிப்பட வில்லை, இந்த சந்தர்ப்பத்தில் இவர் “கபராத் யமீன்” செய்ய வேண்டும். உக்பா இப்ன் ஆமிர் நபிகள் (ஸல்) அறிவித்ததாக கூறுகிறார்கள் நேர்ச்சையை நிறைவேற்ற முடியாமைக்கான பிராயச்சித்தம் “கபராத் யமீன்” ஆகும் (முஸ்லிம்)

இமாம் -அல் நவவி கூறினார்கள் “மாலிக் மற்றும் பலர், உண்மையில் பெரும் பான்மையினர் இதனை ஒரு தீர்க்கமான நேர்ச்சை என்று ஏற்றுக் கொண்டுள்ளார்கள் ” (ஸஹிஹ் முஸ்லிம் லில் -நவவி)

தனக்கு சொந்தமில்லாத செல்வத்தையோ பொருளையோ கொடுப்பதாக நேர்ச்சை வைத்தல்.

ஒரு மனிதன் தனக்கு சொந்தமில்லாத ஒன்றை அல்லாஹ்வின் பெயரால் கொடுப்பதாக நேர்ச்சை செய்தல் அனுமதியற்றது , இப்படி நேர்ச்சை செய்தவர் “கபராத் யமீன்” ஐ செய்வதை தவிர வேறு பரிகாரம் இல்லை, உதாரணமாக ஒருவர் இன்னொருவரின் செல்வத்தில் இருந்து தான தர்மம் செய்ய நேர்ச்சை செய்கிறார், அல்லது இன்னொருவரின் அடிமையை விடுவிக்க நேர்ச்சை செய்கிறார் அல்லது இன்னொருவரின் தோட்டத்தை தானமாக கொடுக்க நினைக்கின்றார், இப்படியான நேர்ச்சைகள் அனுமதிக்கப்படவில்லை, இப்படி செய்தவர்களுக்கு “கபராத் யமீன்” கடமையாகிறது. இதற்கு ஆதாரம் : “அம்ர் இப்ன் சுஐப் தனது தந்தைக்கு அவர் தந்தை கூறியாக அறிவிக்கின்றார்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் ஒரு ஆதமின் மகன் தனக்கு சொந்தமில்லாத ஒன்றை கொடுப்பதாகவோ செய்வதாகவோ நேர்ச்சை வைக்க முடியாது, அவனுக்கு இன்னொருவனின் அடிமையை விடுவிக்க முடியாது, அவனுக்கு இன்னொருவனின் மனிவிக்கு விவாகரத்து அளிக்கவும் முடியாது. (திர்மிதி – 1101)

ஒருவருக்கு “கபராத் யமீன்” நிற்பந்தமில்லாத நேர்ச்சைகள்

மேலும் சில நேர்ச்சைகளுக்கு அந்த நேர்ச்சையை நிறைவு செய்வதையும் அல்லது அதனை செய்யாமல் விட்டு “கபராத் யமீன்” செய்வதையும் தீர்மானிக்கும் அனுமதி நேர்ச்சை செய்தவருக்கு உண்டு, அவைகளில் சிலவாவன:

நேர்ச்சைகள் நம்பிக்கையற்ற, ஆதங்கத்துடன் அல்லது ஒரு கோபத்துடனான நிலையில் செய்யும் நேர்ச்சைகள்: அனைத்து வாக்குருதியுடன் கூடிய நேர்ச்சைகளும், உதாரணமாக ஒருவர் ஒரு வாக்குறுதி செய்கிறார் ஏதாவது ஒன்றை செய்தாக வேண்டும் என்று அல்லது ஒரு காரியத்தை நிறுத்தியாகவேண்டும் என்று அல்லது உண்மை என்றோ பொய் என்றோ சத்தியம் செய்கிறார், இவைகள் போன்றவைகளாகும், இவற்றில் இவர் உண்மையில் ஒரு வணக்க காரியத்தை செய்ய நேர்ச்சை செய்யவில்லை.

ஒரு உதாரணமாக ஒருவர் கோபத்தில் கூற முடியும் இவை இவைகளை இனிமேல் செய்வேன் என்றால், அல்லது இப்படி நடக்கும் என்றால் நான் ஹஜ் செய்வேன், அல்லது ஒரு மாத காலத்திற்கு நோன்பிருப்பேன், அல்லது ஆயிரம் தீனார் தர்மம் செய்வேன், அல்லது இவர் இவருடன் கதைக்க மாட்டேன் அல்லது மனிவியை விவாகரத்து செய்வேன் இப்படி மேலும் பல..! இம் மனிதன் இப்படிக் கூரினாரானாலும் உண்மையில் இக்காரியங்களை இவர் செய்ய விரும்பாதவர், ஆனால் தனது கோப காரணமாக இப்படி கூறினார்.

இது போன்ற சமயங்களில், உதாரணமாக ஒருவர் தனக்கு இருக்கும் முக்கியதத்தை வெளிப்படுத்தும் நோக்கில் இதனைச் செய்யா விட்டால் இப்படிச் செய்வேன் என்று கூறுவாரே ஆனால் ஒன்று அவர் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேன்றும் அல்லது “கபராத் யமீன்” செய்ய வேண்டும்., காரணம் இம்மாறதியான வாசகங்கள் வாக்குருதிகலாகவே கருதப்படுகிறது.

இமாம் இப்ன் தைமியா கூறுகிறார்கள் : உதாரணமாக ஒருவர் கூறுகிறார், நான் உன்னோடு பயணம் செய்வேனே ஆனால் நான் ஹஜ் செய்தாக வேண்டும், அல்லது எனது செல்வம் முழுவதையும் தானம் செய்தாக வேண்டும் அல்லது ஒரு அடிமையை விடுவிக்க வேண்டும், இது போன்றவைகள்..! பெரும்பான்மையான ஸஹாபாக்களின் அபிப்பிராயத்தின் படி இது ஒரு நேர்ச்சையை செய்வதற்கான சத்தியம் (ஹிப்ல் அல் நத்ர்) இது ஒரு தீர்கமான நேர்ச்சை அல்ல, எனவே இவர் இவரின் இந்த வாக்குறுதியை இறைவேற்றா விட்டால் இவர் “கபராத் யமீன்” செய்தால் போதுமானதாகும்.

அனுமதிக்கப்பட்டுள்ள செயல்களை செய்வதாக வைக்கும் நேர்ச்சைகள்

அதாவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து அம்சங்களை கொண்டுள்ள நேர்ச்சைகள், அவையாவன ஒரு குறிப்பிட்ட வகையான ஆடையை அணிவதாக, குறிப்பிட்ட உணவை உண்பதாக, ஒரு குறிப்பிட்ட குதிரை, கழுதை போன்ற மிருகத்தில் அல்லது வாகனத்தில் சவாரி செய்வதாக மற்றும் குறிப்பிட்டவரின் வீட்டுக்கு போவதாக செய்யும் நேர்ச்சைகள்.

தாபித் இப்ன் அல்-தஹ்ஹாக் கூறினார்கள் ” ஒரு மனிதன் ஒரு ஒட்டகத்தை “பவானா” என்ற இடத்தில் அறுத்து பலியிடுவதாக நேர்ச்சை செய்து கொண்டான் (சில அறிவிப்புகளின் படி அவனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறப்பதன் காரணமாக), இந்த மனிதன் நபிகள் (ஸல்) அவர்களிடம் வந்து கூறினான், நான் பவானா என்ற இடத்தில் அறுத்து பலியிடுவதாக நேர்ச்சை செய்துள்ளேன் அதற்கு நபிகள் (ஸல்) அவர்கள் அந்த மனிதனிடம் கேட்டார்கள் அந்த பலியிடும் இடத்தில் முன்னாள் மக்கள் சிலை வழிபாடுகளில் ஈடுபட்டு இருந்தார்களா என்று, அங்கிருந்தவர்கள் அதற்கு இல்லை என்று பதில் அளித்தார்கள், பின் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அப்படியானால் உமது நேர்ச்சையை நிறைவேற்றும், நேர்ச்சைகளை நிறைவேற்றாமை அல்லாஹ்வுக்கு அடிபணியாமை ஆகும், அல்லது நேர்ச்சை செய்யப் பட்டுள்ளவைகள் ஒரு ஆதமின் மகனுக்கு சொந்தமானவைகள் அல்ல ” (அபூ தாவூத் – 2881)

இந்த மனிதன் தனக்கு இறைவன் ஒரு ஆண் குழந்தையை அருளியதட்காக அல்லாஹ்வுக்கு நன்றி செய்யும் பொருட்டு ஒரு ஒட்டகத்தை பவானா என்ற இடத்தில் அறுத்து பலியிடுவதாக நேர்ச்சை செய்து கொண்டான் (யன்பு பிரதேசத்திகு அப்பால் உள்ள ஒரு இடம்). இதனை நிறைவேற நபி (ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார்கள், எனவே இம்மனிதன் அந்த குறிப்பிட்ட இடத்தில் அவனது நேர்ச்சையை நிறைவேற்றினான்.

நாம் அல்லாஹ்விடம் அவனுக்கு எது விருப்பமானதோ அவைகளை செய்ய உதவி செய்யுமாறு பிரார்த்தனை செய்கிறோம், மற்றும் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு சாந்தியையும் சமானாதத்தையும் அருள்வானாக.

தமிழ் மொழிபெயர்ப்பு – அபூ – ஆராஹ் (ஷாஜஹான்)