தாடி சிரைத்தல் (SHAVING THE BEARD)

ஒரு நவீன மறைமுகமான பெண்மை

அபூ அபத்தில்லாஹ் முஹம்மத் அல்ஜீபாலி

தாடி விளக்கம்

தாடி (அரபியில் – லியாஹ்) என்பது ஒருவரது கன்னங்களிலும், தாடைகளிலும், தடைகளின் கீழ் பகுதிகளிலும் , காதுக்கும் கண்ணுக்கும் இடைப்பட்ட பகுதியிலும் மற்றும் கீழ் உதட்டின் கீழ் வளரும் மயிரையும் உள்ளடக்கியதாகும்.

தாடி பற்றிய இஸ்லாமிய சட்டம்

அனைத்து இயற்கயில் முடியுமான ஆண்களின் மீதும் தாடி வளர்ப்பது ஒரு கட்டாய கடமை (வாஜிப்) ஆகும், இதனை உறுதிப்படுத்தும் பல்வேறு பட்ட ஆதாரங்கள் நபியவர்களின் (ஸல்) வாழ்க்கை நடை முறைகளில் காணக்கூடியதாக உள்ளது. மற்றும் இது அனைத்து மார்க்க அறிஞர்களினதும் ஏகோபித்த முடிவாகும். தற்காலத்திய அறிஞர்கள் என்று சொல்லும் போதகர்களின் அறிவுரையை கேட்டு இந்த உயர்ந்த நபிவழியை உதாசீனம் செய்யக்கூடாது, இப்படி நபிவழிக்கு எதிராக தீர்ப்பு சொல்லும் போதகர்கள் மக்களை வழி கெடுக்கிறார்கள். நபி (ஸல்) கூறினார்கள்

ஒரு நல்ல சுன்னாவை (வழியை) ஆரம்பித்து வைப்பவன் அதட்கான கூலியை பெற்றுக்கொள்வான் அத்தோடு யாரொருவர் இவனைப் பின்பற்றி அந்த சுன்னாவை செய்பவரின் நன்மைக்கு நிகரான நன்மைகளையும் பெற்றுக் கொள்வான்..! ஆனால் யாரேனும் ஓரு கெட்ட சுன்னாவை (வழியை) ஆரம்பித்து வாய்ப்பானோ அவன் அதட்கான தீமையை பெற்றுக்கொள்வான் அத்தோடு யாரொருவர் இவனைப் பின்பற்றி அந்த தீமையை செய்பவரின் தீமைக்கு நிகரான தீமைகளையும் பெற்றுக் கொள்வான்..! (முஸ்லிம்)

மேலும் கூறினார்கள்

அல்லாஹ் மனிதர்களின் மார்க்க அறிவை திடீரென்று பிடுங்கி எடுக்க மாட்டான் ஆனால் உண்மையான அறிஞர்களளை எடுப்பதன் (மரணிப்பதன்) மூலம் அல்லாஹ் அவர்களின் அறிவை எடுத்து விடுகின்றான், எனவே உண்மையான அறிஞர்கள் இல்லாதிருக்கும் ஒரு சமயத்தில் மக்கள் மார்க்க அறிவற்றவர்களை தமது தலைவர்களாகவும் தமது மார்க்க சம்பந்த விடயங்களுக்கு தீர்ப்பு வழங்கவும் தேர்வு செய்வார்கள், அப்படியானவர்கள் மார்க்க தீர்வுகளை (பாத்வா) மார்க்க அறிவு இல்லாமல் வழங்குவார்கள். இதன் காரணமாக அவர்கள் வழி தவறியவர்களாகவும் அவர்களை பின்பற்றுபவர்களை வழி கேட்டிலேயும் அழைத்துச் செல்வார்கள். (அல்-புகாரி)

மார்க்க சட்ட திட்டங்களை மீறும் பட்டியல்

அல் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் படி ஒரு முஸ்லீம் தாடியை மழித்தல் பல்வேறான மார்க்க சட்ட திட்டங்களை மீறும் செயலாகும், கீழ் வருபவை இதனை நிறுபிக்கும் சில ஹதீஸ்களாகும்

1 அல்லஹாஹ்வுக்கு அடிபணியாமை

தாடியை மழித்தல் அல்லாஹுக்கு அடிபணியாத ஒரு விடயமாகும், பாரசீகத்தின் மாமன்னன் “கிஸ்ரா” எமன் நாட்டின் ஆளுநராக ஒருவனை நியமித்தான், அவன் நபி (ஸல்) அவர்களிடம் அவனது இரண்டு அரச தூதுவர்களை அனுப்பி அழைப்பாணை விடுத்திருந்தான். அந்த இருவரும் நபி (ஸல்) அவர்களின் சபையில் வந்த போது அவர்களுடைய தாடி வழித்தும் மீசைகள் நீன்றும் காணப்பட்டார்கள், இவர்களது முக வடிவு நபியவர்களுக்கு வெறுப்பை ஏட்படுத்தியதினால் அவர் சொன்னார், உங்களுக்கு கேடு உண்டாகட்டும், யார் உங்களுக்கு இவ்வாறு தாடியை வழிக்கும் படி ஏவியது ? அவர்கள் அதட்கு எங்கள் எஜமான் (“கிஸ்ரா” ) என்றார்கள்…! அதட்கு நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்

ஆனால் எனது எஜமான் (அல்லாஹ் (சு.தா)) எங்களுக்கு தாடியை விட்டுவிட்டு மீசையை கத்தரிக்குமாறு ஆணையிடுள்ளான் (இபின் ஜார் அபர் இல் பதிவாகியுள்ளது – அல்பானி இதனை உறுதிப்படுத்தி உள்ளார்)

2 நபி (ஸல்) அவர்களுக்கு அடிபணியாமை

தாடியை வழித்தல் நபி (ஸல்) அவர்களுக்கு அடிபணியாமையாகும், காரணம் நபி (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் தாடியை வளர விடுமாறு கட்டளையிட்டார்கள், பல வேறுபட்ட ஹதீதுகள் இதனை உறுதி செய்கின்றது.

மீசையை கத்தரித்துக் கொள்ளுங்கள் தாடியை காத்துக் கொள்ளுங்கள் (அல் – புஹாரி , முஸ்லிம்)

நபிக்கு (ஸல்) அடிபணித்தல் அல்லாஹ்வுக்கு அடிபணித்தலுக்கு சமனானதாகும், அதாவது எவர் அல்லாஹ்வின் தூதருக்கு அடிபணிவாரோ அவர் அல்லாஹ்விட்கு அடிபணிவிப்பர் ஆவார் (அன் – நிஸா 4:80)

3 நபியின் (ஸல்) முன்மாதிரி மற்றும் வழிகாட்டலில் இருந்து புறம் திரும்பல்

தாடியை மழித்தல் நபியின் (ஸல்) முன்மாதிரி மற்றும் வழிகாட்டலில் இருந்து புறம் திரும்பல் ஆகும் ஏனெனில் எங்கள் நபி (ஸல்) அவர்கள் நீண்ட அடத்தியான தாடியை கொண்டிருந்தார்கள் (முஸ்லிம்), ஒருவன் நபியவர்களின் தோற்றத்தையும் வழிகாட்டலையுமே தனது முன்மாரிதியாக கொண்டிருக்க வேண்டும், இதனை அல்லாஹ் தனது குர்ஆனில் “.அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.” 33:21

மேலும் நபியவர்கள் (ஸல்)கூறினார்கள், நிச்சசயமாக சிறந்த வழிகாட்டல் முஹம்மதின் (ஸல்) வழிகாட்டலே ஆகும் (முஸ்லிம்)

4 மற்றைய அல்லாஹ்வின் நல்லடியார்கள் வழியில் இருந்து புறம் திரும்பல்

தாடியை வழித்தல் மற்றைய அல்லாஹ்வின் நல்லடியார்கள் வழியில் இருந்து புறம் திரும்பல் ஆகும்..! காரணம் அனைத்து அல்லாஹ்வின் தூதர்களும் (ஸல்), எமது நபி (ஸல்) அவர்களின் சஹாபா தோழர்களும் , அனைத்து பிரசித்து பெற்ற மார்க்க அறிஞர்களும், மற்றும் ஆரம்ப காலத்து அனைத்து இஸ்லாமிய சமுதாயத்தினரும் தாடி வளர்த்து இருந்ததாகவே அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் எமது இஸ்லாமிய முன்னோர்களில் ஒருவராவது தாடியை வழித்து இருந்ததாக எந்த ஒரு அறிவிப்பும் இல்லை, இவ்வாறு இது அவர்களின் வழியாகும், அத்தோடு அல்லாஹ் அவனது திருக் குர்ஆனில் ,

“ எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்; அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும். “ 4:115.

5 மற்றைய மதத்தவர்கள், நம்பிக்கை அற்றவர்களைப் போலவும் பாவனை செய்தல்

தாடியை வழித்தல் அல்லது அதில் அலங்காரம் செய்தல் மற்றைய மதத்தவர்கள், நம்பிக்கை அற்றவர்களைப் போலவும் பாவனை செய்தலுக்கு ஈடனதாகும்..! இதனை பல்வேறு நபி (மொழிகள்) வலியுறுத்துகின்றன…..! உதாரணமாக

“மீசையை கத்தரித்துக் கொள்ளுக்கள்” “தாடியை வளர்த்துக் கொள்ளுங்கள்” “மேஜியன்” இலும் இருந்து வித்தியாசமாக இருங்கள்.( மேஜியன் ஒரு Zorostrian மதத்தின் பதியனாவர் ) முஸ்லிம்

மீசையை கத்தரித்துக் கொள்ளுக்கள் , தாடியை விட்டு விடுங்கள் , மற்றைய வேதம் அருளப்பட்டவர்களிடம் இருந்தும் வித்தியாசமாக இருங்கள். (முஸ்லிம்)

நீங்கள் சிலை மற்றும் அல்லாஹ்ஹுவை வணங்குபவர்களிடம் இருந்தும் வித்தியாசமாக இருங்கள் , உங்களின் மீசைகளை கத்தரித்துக் கொள்ளுங்கள் உங்கள் தாடியை காத்துக் கொள்ளுங்கள் (அல் புகாரி / அல் முஸ்லிம்)

எனவே நாம் மற்றைய சமூகத்தினரிடம் இருந்து வித்தியாசமாக ஒரு முஸ்லீமுடைய தோற்றத்தில் இருக்குமாறு கட்டளை இடப்பட்டுள்ளோம், அதுவே நாம் இறைவனிடம் சூரா பாத்திஹாவில்

“நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!” “ (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.” (1-6 , 1-7)

மேலும் அல்லாஹ் சூராஹ் 45 :18 இல்

“ இதன் பின்னர் உம்மை ஷரீஅத்தில் (மார்க்கத்தில்) ஒரு நேரான வழியில் நாம் ஆக்கியுள்ளோம். ஆகவே நீர் அதனையே பின்பற்றுவீராக; அன்றியும், அறியாமல் இருக்கின்றார்களே அவர்களின் விருப்பங்களைப் பின்பற்றாதீர்.”

“நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் யாரொருவர் ஒரு கூட்டத்தினரை ஒப்பினை செய்வாரோ அவர் அக்கூட்டத்தினை செர்தவராவார்” இந்த ஹதீத் அபூ தாவூதில் பதிவாகி உள்ளது மேலும் இதனை ஒரு ஸஹிஹ் ஹதீத் என்று அல்பானி ரஹ் அவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

6 அல்லாஹ்வின் அனுமதியின்றி அவனது படைப்புகளின் வடிவை மாற்றியமைப்பது

அல்லாஹ்வினால் அருளப்பட்ட தோற்றத்தை ஒரு பெண் மாற்றுவாளே ஆனால் (அதாவது முகத்தில் இருக்கும் மயிரை நீக்குவது, பற்களை நிறைப்பது (தனது அழகை அதிகரிக்க) மற்றும் உடம்பில் பச்சை குத்த்துவது) அவள் அல்லாஹ்வின் சாபத்திற்கு ஆளானவலாவால் (அல் புகாரி / அல் முஸ்லிம்)

இங்கு ஏன் பெண்களைக் குறிப்பிடப்பட்டு உள்ளது என்றால், பெண்களே ஆண்களை விட தம்மை அலங்கரித்துக் கொள்ளக் குடியவர்களாக இருக்கிறார்கள், அனால் இந்த எச்சரிக்கை ஆண் பெண் இருவருக்குமே ஆகும். எனவே தாடியை நீக்குவது மேற்குறிப்பிட்ட எச்சரிக்கைக்கு உள்ளானதே ஆகும். மேலும் இது ஒரு பெண் முகத்தில் இருக்கும் மயிரை நீக்குவதை விட கேவலமான செயலாகும், ஏனெனில் செய்த்தான் (இப்லீஸ்) கூறினான் “இன்னும் நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களிடம் வீணான எண்ணங்களையும் உண்டாக்குவேன்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். இன்னும் அல்லாஹ்வின் படைப்புகளையுடைய கோலங்களை மாற்றும்படியும் ஏவுவேன்” என்றும் ஷைத்தான் கூறினான்; எனவே எவன் அல்லாஹ்வை விட்டு ஷைத்தானை உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்கிறானோ, அவன் நிச்சயமாக பகிரங்கமான பெரு நஷ்டத்தை அடைந்தவன் ஆவான்.” 4:19

7 ஒரு பெண்ணின் சாயலை பின்பற்றுதல்

தாடி ஒரு ஆணையும் பெண்ணையும் வேறுபடுத்திக் காட்டும் பெரிய அடையாளமாகும், தாடியை மழிப்பது இந்த மகா பெரிய அடையாளத்தை அழிப்பதாகும்..! நபிகள் (ஸல்) மொழிந்தார்கள் “அல்லாஹ் பெண்களைப் போல் வேசமிடும் ஆண்கள் சபிக்கிறான், ஆண்களைப் போல் வேசமிடும் பெண்களையும் சபிக்கிறான்” (அல் – புகாரி)

8 தாடியை சிரைப்பது அல்லாஹ்வின் இயற்கையான படைப்புடன் (துய பித்ரா) மாறுபடுகிறது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் பத்து குணாதிசயங்கள் ஒரு நல்ல, தூய்மையான முஸ்லிமின் அடையாளமாகும் அவைகளில் இரண்டு மீசையை கத்தரிப்பதும் தாடியை வளர்ப்பதுமாகும்.

நபி (ஸல்) கூறுகின்றார்கள் ஒவ்வொரு குழந்தையும் தூய்மையான ‘பித்ரா’ விலேயே பிறக்கின்றன அனால் பிறகு அவைகள் சமுகத்தின் ஊடுருவல் மூலமும், பெற்றோரின் வளர்ப்பு மூலமும் பதிக்கப் படுகின்றன.

“இது ஒரு நம்பிக்கை அற்றவர்களின் வழியாகும்”, துரதிஷ்ட வசமாக பல முஸ்லிம்களின் தற்போதைய வழி நம்பிக்கை அற்றவர்களை பின் பற்றியேஇருக்கிறது, ஏனெனில் தனது தாடியை வழித்து நடிகர்களின் விளையாட்டு வீரர்களின் பாடகர்களின் பாணியிலே உடை நடை பாவனை செய்வதில் பெருமைப்படுகிறார்கள் , இது எங்கள் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலுக்கு நேர்மாராகும்! மேற்குறிப்பிட்ட ஹதீத் இவைகளையே கூறுகிறது.

இந்த பித்ரா ஒருபோதும் காலத்திற்கு ஏற்றவாறு மாறாது அல்லாஹ் தனது திருமறையில் கூறுவத்தின் கருத்தாவது

ஆகவே, நீர் உம்முகத்தை தூய (இஸ்லாமிய) மார்க்கத்தின் பக்கமே முற்றிலும் திருப்பி நிலை நிறுத்துவீராக! எந்த மார்க்கத்தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள். (30:30)

சிலர் எமது நபி (ஸல்) அவர்களின் நேரான வழிகாட்டலை மறுத்து எதோ தனது வாழ்க்கையின் குறிக்கோள் இந்த உலகத்தில் தான் இருக்கின்றது என எண்ணிக் கொண்டு, தனது தாடியை வழிப்தற்கு காரணமாக தனது மனைவி , வேளை மற்றும் பலதைகாரணமாக காட்டுகின்றார்கள்.

மற்றும் சிலர் தாடி தங்களுக்கு சொறிச்சளையும் அசவ்கரியத்தையும் தருகிறது என சொல்கிறார்கள், இதை இவர் இந்த பித்ரா (அல்லாஹ்வின் அமைப்பு) வில் இருந்து விலகிக் கொள்ள காரணமாக முடியாது, அது உண்மையெனில் இந்த மனிதன்துப்பரவில் குறைபாடு உள்ளதையே காட்டுகின்றது. எனவே அவர் செம்மையான முறையில் நபியின் சுன்னா விற்கு ஏற்றவாறு வுதூ மற்றும் துப்பரவு செய்து கொள்ள வேண்டும்.

மகா பெரும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் கருத்து

நான்கு மத்ஹப்களின் இமாம்கள் உள்ளடக்கிய அனைத்து சலபுஸ் சாலிஹீன்களின் இமாம்களினதும் ஏகோபித்த முடிவு தாடியை மழிப்பது (வழிப்பது) மார்க்கத்தில் தடையான (ஹராம்) ஒன்றாகும். மற்றும் உமர் (B)பின் அப்துல் அசீஸ் அவர்களின் காலத்தில் தாடியை வழிப்பது தடுக்கப்பட்ட காரியமாகும் இது ஒரு அங்கவீனம் செய்தல் போன்ற காரியமாகும், அவர்கள் ஒரு தாடி இல்லாதவனை ஆண்தன்மை இல்லாதவன் என்றே கருதினார்கள். மேலும் அதிகமானோர் அவர்களின் சாட்சியத்தை ஏற்றுக்கொள்ளவோ அவர்களை தொழுகைக்கு முன் நிறுத்தவோ மாட்டார்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் எங்களுக்கு இந்த மார்க்கத்தை, நபி (ஸல்) அவர்களின் முன்மாதிரிக்கு ஏற்ப சரிவர விளங்கி அதனை பின்பற்ற வழி செய்வானாக.

(தமிழில் அபூ ஆராஹ் – ஷாஜஹான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *