நாங்கள் செய்யும் நன்மைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால்?

ஷேக் முஹம்மத் சாலிஹ் அல் உதைமீன் அவர்களின் இத்திபாஹ் என்ற நூலில் இருந்து எடுக்கப் பட்டது. தமிழில்மொழிபெயர்ப்பு – அபூ-ஆராஹ் (ஷாஹ்ஜஹான்)

அன்பான இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! நாங்கள் நாளாந்தம் பல்வேறுபட்ட நல்ல காரியங்களைச் செயகிறோம் மற்றும் இந்த நல்ல காரியங்களுக்காக நாம் அல்லாஹ்விடம் நற்கூலியையும் எதிர்பார்க்கிறோம், இருப்பினும் நாங்கள் செய்யும் நற்காரியங்கள் இறைவனிடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்று கேட்டால் எம்மில் எத்தனை பேருக்கு ஆம் என்று பதில் கூற முடியும்?

எனவே தான் இறைவனும் இறைத்தூதரும் எங்களுக்கு நற்காரியங்களை எப்படிச் செய்வது என்று காட்டித் தந்து உள்ளார்கள்.

நாங்கள் செய்யும் நன்மைகள் ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதற்கான நிபந்தனைகள் !

1 இஹ்லாஸ் (உளத்தூய்மையும் இறைவனின் பொருத்தத்தையும் நாடுதல்)

2 சுன்னாவைப் பின்பற்றுதல் நபியின் (ஸல்) வழியை, உதரணங்களை பின்பற்றுதல்)

இக்ஹ்லாஸ்

நாங்கள் செய்யும் எந்தக் காரியத்தையும் இறைவன் இறைவன் ஏற்றுக்கொள்ள வேண்டுமானாலும் அவற்றை நாம் இக்லாஸ் உடன் செய்ய வேண்டும், அதாவது தொழுகையோ நோன்போ தான தர்மமோ செய்வது என்றால் அதனை இறைவனுக்கு மாத்திரமே என்ற எண்ணத்துடனும் இறையவனின் திருப்பொருத்தத்தை நாடியுமே செய்ய வேண்டும், இல்லை என்றால் அந்தக் காரியம் இறைவனால் அங்கீர்கரிக்கப்பட மாட்டாது.

சுன்னவைப் பின்பற்றுதல்

மேலும்நபியவர்கள் (ஸல்) எங்களுக்கு ஒரு காரியத்தை எப்படிச் செய்தல்மேட்குறிப்பிட்டவாறுஇறையவனின் திருப்பொருத்தத்தைப் பெட்ட்ருக்கொள்ள முடியும் என்று கற்பித்துத் தந்துள்ளார்கள், எனவேநபியவர்கள் (ஸல்) வழிமுறையைக் கருத்தில் கொண்டு எந்தக் காரியத்தை செய்வதும்அந்தக் காரியம் இறைவனால் அங்கீர்கரிக்கபட வேண்டியதற்கான நிபந்தனை ஆகும்.

எனவே மார்க்க அறிஞர்கள் சுன்னாவை ஆறு (6) பிரிவுகளாக வகுத்துள்ளார்கள் .

  • எப்படி
  • எத்தனை
  • காரணம்
  • வகை
  • நேரம்
  • இடம்

1 எப்படி

நாம் ஒரு காரியத்தை செய்யும் பொது அதனைஇக்ஹ்லாஸ்உடனும் அடுத்த படியாக அதனை நபியவர்கள் (ஸல்) எப்படிச் செய்தார்கள் என்றும் கருத்தில் கொண்டு அக்காரியத்தை செய்ய வேண்டும். உதாரணமாக தொழுகையை எடுத்துக் கொண்டாள் அதனை நபியவர்கள் (ஸல்) எப்படி தொழுது காட்டினார்கள், அதாவது நேர்த்தி, தக்பீர், ருகூஹ், நிலைக்கு வருதல், சுஜுத் என்ற ஒழுக்கு முறையில் செய்தாக வேண்டும்; இல்லை என்றால் அந்தக் காரியம்இறைவனால் அங்கீர்கரிக்கப்பட மாட்டாது.

2 எத்தனை

மேலும் அதே தொழுகையை உதாரணமாக எடுத்துக்கொண்டாள் அக்குறிப்பிட்ட தொழுகையை நபியவர்கள் எத்தனை ரகாத்துக்களுடன் தொழுதார்கள் இவ்வாறு ஹஜ்ஜை எடுத்துக் கொண்டால் “கஹ்பா”வை சுற்றி எத்தனை தரம் வலம் வந்தார்கள் என்பது போன்ற எண்ணிக்கைகளை நாம் அறிந்து செயல்பட வேண்டும்இல்லை என்றால் அந்தக் காரியமும்இறைவனால் அங்கீர்கரிக்கப்பட மாட்டாது.

3 காரணம்

ஒரு காரியத்தை நபியவர்கள் எதன் காரணமாகச் செய்தார்கள், அல்லது செய்யும் படி ஏவினார்கள் என்பதை அறிந்து அக்காரியத்தை செய்வதும் அக்காரியம்இறைவனால்ஏற்றுக் கொள்ளப்படுவதட்கான முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாகும்.

உதாரணமாக சூரிய சந்திர கிரகணத் தொழுகை, வித்ர் தொழுகை, மழை தேடித் தொழும் தொழுகை மற்றும் “தயம்மும்”போன்றவற்றை நபியவர்கள் சில காரணங்களுல்ககவோ அல்லது சந்தர்ப்ப காரணமாகவோ செய்தார்கள், எனவே மேற்குறிப்பிட்ட வணக்க்க்களை எங்களால் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் செய்ய முடியாது, “கிரகனமற்ற நாட்களில் கிரகணத் தொழுகையை தொழுவதோ, நீர் இருக்கும் போது “தயம்மும்”செய்வதோஇறைவனால் அங்கீர்கரிக்கப்பட மாட்டாது. இந்த உதாரணங்களை மையமாகக் கொண்டு நாம் எமது கடமைகளை செய்ய வேண்டும்.

4 வகை

வகையும் எங்களின் சில நன்மைகள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான முக்கிய நிபந்தனையாகும். உதாரணமாக உல்ஹிய்யாவை எடுத்துக் கொண்டால் எமக்கு ஒரு கோழியையோ அல்லது ஒரு வாத்தையோ அறுத்து பலியிட முடியாது, அது ஒரு ஆடகவோ மடாகவோ அல்லது ஒரு ஓட்டகையகவோ மாத்திரமகவே இருக்க வேண்டும். யாராவது இவை தவிர்ந்த வேறு ஒரு பிராணியை அறுத்து பலியிட்டால் அது உல்ஹிய்யவாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது; மேலும் அது ஒரு “சதகா”வாகவே அமையும்.

5 நேரம்

நாம் செய்யும் காரியங்களை எந்த நேரத்தில் செய்யப்பட வேண்டும் என்பது அடுத்த முக்கிய விடயமாகும். உதாரணமாக நாம் பலத்தைக் கூறலாம். “ஹஜ்” அதனை அந்த குறிப்பிட்ட காலப் பகுதியிலேயே செய்ய வேண்டும், பதிலாக ஹஜ் அல்லாத மாதமொன்றில் ஹஜ் செய்வோமேன்றல் அதுஅங்கீர்கரிக்கப்பட மாட்டாது. இதுபோல் ரமழானுடைய பார்லான (கட்டாயமான) நோன்பை ரமலான் அல்லாத காலத்தில் நோற்க முடியாது (அதனை கலாச் செய்வதைத் தவிர) இவற்றை அனைவராலும் சாதாரணமாக விளங்கிக் கொள்ள முடியும், எனவே இவற்றை மையமாகக் கொண்டு நாம் எமது அனைத்து அமல்களையும் ஆராய்ந்து பார்த்து செயல்பட வேண்டும்.

6 இடம்

இந்த “இடம்” என்ற அம்சமும் மேற்குறிப்பிட்ட மற்றைய நிபந்தனைகளை போலவே முக்கியமானதொரு விடயமாக கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது இந்த நிபந்தனை ஒரு காரியத்தை அல்லது வணக்கத்தை எந்த இடத்தில் செய்வது என்பதை விளங்கி செய்வதாகும் இல்லையெனில் அந்தக்காரியம் இறையவனால்ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. உதாரணமாக “ஹஜ்” கடமையை மக்காவில் மற்றும் கஹ்பாவில் மாத்திரமே நிறைவேற்ற முடியும், அதே போல இஹ்திகாப் மஸ்ஜிதில் மாத்திரமே இருக்க முடியும்.

ஒருவர் தூய மனத்துடன் ஹஜ் செய்ய நாடி மக்காவுக்குப் பதில் “தம்மாம்”முக்கு பயணம் செய்தால் அது ஹஜ் ஆக மட்டது, அதே போல் மஸ்ஜிதை தவிர வேறெங்கும்இஹ்திகாபில் இருக்க முடியாது.

எனவே எங்கள் நாளாந்த வாழ்கையில் நாம் செய்யும் அனைத்துக் காரியங்களையும், நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலுக்கு ஏற்பமேற்குறிப்பிட்ட பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம். இவ்வாறு எங்கள் அமல்கள் அல்லது வணக்கங்கள் அனைத்தையும்நபிவழிக்கு ஏற்ப மேற்குறிப்பிட்ட தக்க பிரிவுகளுக்குள் அடங்காவிட்டால் அவ்வமல்கள் அல்லாஹ்வினால்ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

இறுதியாக எது எப்படி இருப்பினும் அல்லாஹ் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாக இருக்கின்றான், எனவே நாம் எமது அறியாமையின் காரணமாக செய்யும் காரியங்களை அவன் பிழைபொறுத்து மன்னிப்போனாக இருக்கின்றான்.

இருப்பினும் முஸ்லிமான ஒவ்வருவரின் கடமை இந்த புனித மார்கத்தை சரிவரவிளங்கி, விளங்கவிடின் மார்க்க அறிஞர்களிடம் கேட்டு விளங்கி அதனை அல் குர்ஆனுக்கும் நபியின் வழிகாட்டலுக்கும் அமைய நடப்பதாகவும்.அல்லாஹ் எங்களுக்கு அவனின் மார்கத்தை சரிவரக் காட்டுவானாக என்றுபிரார்த்திக்கிறேன்.