சுவர்க்கத்தின் வடிவமைப்பு

சுப்ஹானல்லாஹ்….!

நீர் அதனின் தரையும் மண்ணும் எப்படி இருக்கும் என்று கேட்டால் அது சந்தனத்தையும் குங்குமத்தையும் கொண்டதாகும்…!

நீர் அதனின் கூரை என்னெவென்று கேட்டால் அது வல்ல அல்லாஹ்வின் சிம்மசனமாகும்…!

நீர் அதனின் கற்கள் என்னெவென்று கேட்டால் அவை முத்துக்களும் இரத்தினக் கற்களும் ஆகும்…!

நீர் அதனின் கட்டிடங்கள் எப்படி என்று கேட்டால் அவைகள் தங்கத்திலும் வெள்ளியிலுமான கற்களால் கட்டப்பட்டிருக்கும்

நீர் அங்கே மரங்கள் எப்படி இருக்கும் என்று கேட்டால் அவைகளின் அடிகள் தங்கமாகவும் வெள்ளியுமாகவும் இருக்கும்.

நீர் அம்மரங்களின் கனிகள் எப்படி என்று கேட்டல் அவை வெண்ணையை விட மென்மையாகவும் தேனிலும் சுவையானதாகவும் இருக்கும்

நீர் அம்மரங்களின் இலைகள் எப்படி இருக்கும் என்று கேட்டால் அவைகள் அதி மென்மையான துணியை விட மிக மென்மையாக இருக்கும்

நீர் அங்கே ஓடும் அருவிகள் எவ்வாறு இருக்கும் என்று கேட்டல், அங்கே பாலாறு அதன் சுவை மாறாமலும், மதுவாறு அதில் குடிப்பருக்கு மிகவும் சுவையாகவும், தேனாறு மிகவும் தூய்மை ஆனதாகவும் நீராறு உட்சாகம் ஊட்டுவதாகவும் இருக்கும்.

நீர் அங்கே வழங்கப்படும் உணவுகளை கேட்டல், அங்கே நீர் விரும்பும் அனைத்து கனிவகைகளும், பறவைகளின் மச்சங்களும் பரிமாறப்படும்

நீர் அங்கே வழங்கப்படும் பானங்களை கேட்டால் அவை “தஸ்னீம்”, இஞ்சி மற்றும் காபூர் ஆகும்

நீர் அங்கே பாத்திரங்கள் எவ்வாறு இருக்கும் என்று கேட்டால் அவை தங்கத்தினாலும் வெள்ளியினாலும்  மிகவும் பளிங்கு போல் பளபளப்பாகவும் இருக்கும்

நீர் அங்கிருக்கும் நிழலை பற்றிக் கேட்டால் அங்கு ஒரு மரத்தின் நிழலின் விசாலத்தை ஒரு வேகமான ஒடக் கூடிய குதிரை வீரன் நூறு வருட காலமாக ஓடினாலும் அதனை கடக்க முடியாது

நீர் அதனின் விசாலத்தை கேட்டால், அங்கு மிகவும் குறைந்த அந்தஸ்தில் வாழக்கூடிய ஒருவருக்கு கிடைக்கக் கூடிய மாளிகைகளினதும் தோட்டங்களினதும் எல்லை ஒருவர் ஆயிரம் வருட பயணிக்கும் தொலைவுக்கு சமமானதாகும்.

நீர் அங்கிருக்கும் கூடாரங்களைப் பற்றிக் கேட்டால், அவைகள் முத்துக்கள் பாதுகாக்கப் படுவது போல் ஒவ்வொன்றும் அறுவது மைல் தொலைவு வரை பரந்திருக்கும்.

நீர் அங்கிருக்கும் கோபுரங்களின் பற்றிக் கேட்டால், அவை அறைகளின் மேல் அறைகளாகவும் அதன் கீழ் அருவிகள் ஓடிக்கொண்டிருக்கும்.

நீர் அங்கிருக்கும் கோபுரங்களின் உயரத்தை பற்றிக் கேட்டால், நீர் வானத்தில் நட்சத்திரங்களை கண்களால் காண முடியும், ஆனால் அந்த கோபுரங்களின் உயரத்தின் முடிவை காண முடியாது

நீர் அங்கும் வாழக்கூடியவர்களின் ஆடைகளை பற்றிக் கேட்டால், அவை பட்டினாலும் தங்கத்தினாலும் அமைக்கப் பட்டிருக்கும்.

நீர் அங்கு வழங்கப்படும் படுக்கைகளைப் பற்றிக் கேட்டல், அங்கே போர்வைகள் அதி உயர் பட்டினாலும் மிக தரமாகவும் வடிவமைக்கப் பட்டிருக்கும்.

நீர் அங்கு வாழ்பவர்களின் முகங்களின் அழகைப் பற்றிக் கேட்டால், அவை பூரண சந்திரனைப் போல் பிரகாசித்துக் கொண்டிருக்கும்.

நீர் அங்கு வாழ்பவர்களின் வயதைக் கேட்டால், அவர்கள் முப்பத்தி மூன்று வயதுடையவர்களாகவும், மனித குளத்தின் தந்தை ஆதமின் தோற்றத்திலும் காணப்படுவார்கள்

நீர் அங்கிருப்பவர்கள் எதனை கேட்டுக் கொண்டிருப்பார்கள் என்று கேட்டால், அவர்கள் அவர்களின் மனைவியர்கலான “ஹூர் அல் ஐன்” களின் பாடல்களையும் (சுவனத்து கண்ணிகள்), அதற்கும் மேலாக வானவர்களின் மற்றும் இறைத் தூதர்களின் உரையாடல்களையும், இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்த பிரபஞ்சத்தை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்வின் பேச்சையும் கேட்பார்கள்.

நீர் அங்கு வேலைக்கு அமர்த்தப் பட்டிருக்கும் அடியாட்களை பற்றிக் கேட்டால் அவர்கள் என்றும் இளமையுடன் திகழும் சிறு இளைஞர்கள், சிந்திய முத்துக்களைப் போல் காட்சியளிப்பார்கள்.

ஓ அல்லாஹ் எங்களின் பாவங்களை மன்னிப்பாயாக எங்களையும் எங்கள் பெற்றோகளையும், சகோதர சகோதரிகளையும், உற்றார் உறவினர்களையும் மற்றும் அனைத்து முஸ்லீம்களையும் அந்த கண்ணியமிக்க சுவர்க்கத்தில் நுழையச் செய்வாயாக..!

தமிழில் – அபூ ஆராஹ்