(இது இமாம் இப்ன் அல்கையும் அல் ஜவ்சியா அவர்களின் அல் “குர்பாது வ அல் குரபா” என்ற சிறு கட்டுரையின் தமிழாக்கமாகும், இந்த தமிழாக்கத்தில் சில பிரத்தியோக வசனங்களும் ஒழுங்கு முறையும் கையாளப்பட்டுள்ளது – தமிழில்மொழிபெயர்ப்பு – அபூ-ஆராஹ் (ஷாஹ்ஜஹான்)
இஸ்லாம் ஒரு புதுமையாகவே ஆரம்பமானது, அதனை சரிவரப் பின்பற்றுபவர்கள் ஒரு காலத்தில் அந்நியர்களாகவே காணப்படுவார்கள், அந்த அந்நியர்களுக்கு நன்மாராயணம் உண்டாகட்டும்..!
இஸ்லாத்தில் புதுமையின் விளக்கம்..!
அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பின்பற்றும் மக்கள் பல சமையங்களிலும் சந்தர்ப்பங்களிலும் தாம் ஒரு இடத்திக்கு பொருத்தமானவர்கள் அல்ல அல்லது ஒரு உரிமை அற்றவர்கள் என்ற மனோநிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இந்த உணர்ச்சி ஒரு உண்மையான முஸ்லீமுக்கு தாம் முஸ்லீம் அல்லத மக்களின் கூட்டங்களில் அல்லது கலாச்சாரங்களில் பங்குபெற நேரும்போது உண்டாகிறது, ஆனால் துரதிஷ்டவசமாக இந்த உணர்ச்சி சிலவேலை தாம் தனது இஸ்லாமிய சகோதர சகோதரிகளோடு உறவாடும் போதும் உண்டாகிறது.
ஒரு மனிதன் தனது சகோதரன் அல்லது சகோதரி இஸ்லாத்திற்கு, நபியின் வழிகாட்டலுக்கு மாற்றமான காரியங்களைச் செய்வதை அல்லது அவர்கள் செய்யும் காரியம் அவர்களை இஸ்லாத்தை விட்டுமே தூக்கி எரியும் காரணமாகவும் இருப்பதையும் பார்க்கிறான். இருந்திருப்பினும் கூட அம்மனிதன் தான் இவர்களை தடுத்து நிறுத்தவோ அல்லது மறுப்புத் தெரிவிக்கவோ சக்தியற்ற நிலையில் இருப்பதாக உணர்கிறான்.
எமது சில சகோதர சகோதரிகள் விசேடமாக அவர்களுக்கு போதிய அளவு “தக்வா” (இறைப் பயபக்தி) அல்லது இஸ்லாமிய அறிவு இல்லாத காரணத்தினால் சிலவேளை அவர்கள், அல்லாஹ் மற்றும் அவனது தூதர் அக்காரியத்தை தடுத்துள்ளார்கள் என்று தெரிந்து இருந்தும் தமது நண்பர்களின் அல்லது உறவினர்களின் கட்டாயத்தின் பேரிலோ ஏவுதலின் பேரிலோ அல்லது அவர்களின் முகத்துதிக்காகவோ அதனைச் செய்கிறார்கள்.
இம்மனிதர்கள் இவற்றைக் கண்களால் கண்டும், அவற்றைத் தடுத்து நிறுத்த சக்தியற்றவர்கலாகவோ அல்லது இவர்களை தடுத்து நிறுத்த தமக்கு துணை புரியவாவது யாரும் இல்லையே என்றும் ஆதங்கப் பட்டு தோல்வி மனநிலையை அடைகிறார்கள்.
இந்நிலைக்கு தள்ளப்பட்ட இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு அல்லாஹ்வின் கருணை உண்டாகட்டும். மற்றும் அவர்கள் அல்லாஹ்வின் குர்ஆணைக் கொண்டும் நபியவர்களின் இந்நிலைமையை விபரித்து பரிகாரம் அளிக்கும் பல அறிவுரைகளைக் கொண்டும் தமது மனங்களை சமாதானப்படுத்திக் கொள்ளட்டும்.
ஏன் இவர்கள் புதியவர்கள் / அந்நியர்கள் என் அழைக்கப்படுகிறார்கள்
அல்லாஹ் குர்ஆனிலே கூறுகின்றான் “உங்களுக்கு முன்னால் இருந்த சமுதாயங்களில் இந்த பூமியில் குழப்பங்களை தடுக்கக் கூடிய அறிவுடையோர் இருந்திருக்கக் கூடாதா? மிகக் குறைவாகவே தவிர (அவ்வாறு இருக்கவில்லை.) அவர்களை நாம் காப்பாற்றினோம். யார் அநியாயம் செய்தார்களோ அவர்கள் தங்கள் செல்லச் செருக்கையே பின்பற்றுகிறார்கள்; மேலும் குற்றவாளிகளாகவும் இருந்தார்கள்” (ஹூத் – 116)
மேற்குறிப்பிட்ட அத்தியாயம் உலகில் வாழும் தீமைகளை தடுக்கக்கூடிய ஒரு சிறிய கூட்டத்தரைக் குறிப்பிடுகிறது. இந்த சிறிய கூட்டத்தையே பற்றியே நபி (ஸல்) அவர்கள் “இஸ்லாம் ஒரு அந்நியமாகவே அல்லது புதுமையாகவே ஆரம்பமானது, அதனை சரிவரப் பின்பற்றுபவர்கள் ஒரு காலத்தில் அன்னியவர்கலாகவே அல்லது புதியவர்களாகவே காணப்படுவார்கள், அப்புதுயவர்களுக்கு நன்மாராயணம் உண்டாகட்டும்..!”
[“தூபா” இது சுபனத்தில் இருக்கும் ஒரு மரமாகும். எனவே நபியவர்கள் இந்த புதியவர்களுக்கு சுவனத்திற்கான நன்மாராயனத்தை வழங்கினார்கள்]
நபியிடம் கேட்கப்பட்டது, யார் இந்தப் புதியவர்கள் இறைவனின் தூதரே என்று? அதற்கு நபியவர்கள் “யார் ஒருவர் வழிதவறும் போது அவரைத் தடுத்து நிறுத்துகிறாரோ அவரே” என்றார். (இது “அபூஅமர் அல் தானி” ஆல் இப்ன் மசூத் அவரிடம் இருந்து அறிவிக்கப்படுகிறது – மற்றும் ஷேய்க் அல் அல்பானி இதனை ஆதாரபூர்வமாக்கி உள்ளார், மற்றும் ஒரு அறிவித்தலில் “எனது வழிமுறை சீர் குழைந்து இருக்கும் போது யார் எனது வழிமுறையை சரிவர ஏவுகிறார்களோ அவர்களே எனவும், மற்றும் ஒரு அறிவித்தலில் மேற்குறிப்பிட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் “அவர்கள் ஒரு பெரிய பாவம் செய்யும் கூட்டத்தின் மத்தியிலே, தீமைகளை எதிர்க்கும் ஒரு சிறிய கூட்டத்தார், இந்த சிறிய கூட்டத்தை ஆதரிப்பவர்களை விட எதிர்ப்பவர்களே அதிகமாக இருப்பார்கள் – இது இப்ன் அசாகிர் ஆல் அறிவிக்கப் பட்டுள்ளது மேலும் ஷேய்க் உல் அல்பானி இதனை ஆதாரபூர்வமாக்கி உள்ளார் )
இந்த புகழுக்குரிய மக்களை புதியவர்கள் அன்று கூறுவதன் காரணம் அவர்கள் மிகவும் குறைந்தவர்களாகவே எம் சமூகத்தில் காணப்படுகிறார்கள். இவ்வாறு மற்றைய சமூகத்தவரோடு ஒப்பிடும் போது முஸ்லீம்கள் ஒரு புது மனிதர்கல்ளாகவே காணப்படுகிறார்கள், அதேபோல் உண்மையான முஸ்லீம்கள் (குர்ஆணையும் நபியின் வழிகாட்டலையும் சரிவரப் பின்பற்றுபவர்கள்) மற்றைய முஸ்லீம்களோடு ஒப்பிடுகையில் புது மனிதர்களாகவே காணப்படுகிறார்கள், அதேபோல் உண்மையான இஸ்லாமிய அறிந்ஞர்கள் உண்மையான முஸ்லீம்கள் மத்தியில் புது மனிதர்கல்ளாகவே காணப்படுகிறார்கள். குறிப்பாக குர்ஆணையும் நபியின் வழிகாட்டலையும் சரிவரப் பின்பற்றுபவர்கள், யார் தம்மை மற்றைய வழிதவறிப் போகும் மக்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்கிறார்களோ அவர்கள் மற்றயவர்களுக்கு மத்தியில் புது மனிதர்கலாகவே இருக்கிறார்கள்.
உண்மையில் அவர்கள் புதியவர்களாகக் கருதப்படுவத்தின் காரணம் அவர்களின் நம்பிக்கையோ அல்லது நடவேடிக்கைகளோ அல்ல, அதன் உண்மையான காரணம் அவர்களின் மிகக் குறைந்த எண்ணிக்கையே ஆகும். இதைத் தான் அல்லாஹ் தனது குர்ஆனில் “பூமியில் உள்ளவர்களில் பெரும் பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். ” (அல் அனாம் – 116 ) அல்லாஹ் மேலும் “ஆனால் நீர் எவ்வளவு அதிகமாக விரும்பினாலும் (அம்) மனிதர்களில் பெரும் பாலோர் (உம்மை நபி என) நம்பமாட்டார்கள்.” (யூசுப் – 103 ) ,
இன்னும் அல்லாஹ் அருள் செய்த சட்ட திட்டத்தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக. அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றாதீர்கள்;. அல்லாஹ் உம்மீது இறக்கிவைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பிவிடாதபடி, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக. (உம் தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விடுவார்களானால், சில பாவங்களின் காரணமாக அவர்களைப் பிடிக்க நிச்சயமாக அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக. மேலும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர்.” (அல்-மாய்தா – 49) “நான் என் மூதாதையர்களான இப்றாஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன்; அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணைவைப்பது எங்களுக்கு தகுமானதல்ல, இது எங்கள் மீதும் (இதர) மக்கள் மீதும் அல்லாஹ் புரிந்த அருளாகும் – எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதில்லை.” ( யூசுப் – 38 )
எனவே சகலவற்றையும் அறிந்து படைத்துப் பாதுகாப்பவனான அல்லாஹ் தன்னை அதிகமான மக்கள் சரிவரப் பின்பற்ற மாட்டார்கள் என்றும் ஒரு குறிப்பிட்ட சிலரே அவனைச் சரிவரப் பின்பற்றுவார்கள் அத்தோடு அவர்கள் மற்றைய அனைத்து மனிதர்களிலும் வேறு பற்ற புதியவர்கள்ளக இருப்பார்கள் என்று அறிந்து இருக்கின்றான்.
நம்பிக்கையில், கொள்கையில் மற்றும் செயல்களில் வித்தியாசமானவர்கள் மனித குளத்தின் மத்தியிலே இருக்கத்தான் செய்கிறார்கள் ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வின் வேதத்திற்கும் சட்டதிட்டத்திட்கும் மாறுபட்டு இருப்பதினேலேயாகும். இவ்வாறு நாம் பல்வேறு பற்ற வித்தியாசமானவர்களையும் புதுமையையும் காண்கிறோம் எனவே இப்புதியவர்களில் சிலர் புகழ்ச்சிக்குரியவர்கலாகவும் மற்றவர்கள் குறைகூறப் படக்கூடியவர்கலாகவும் இருக்கிறார்கள் , மற்றும் சிலர் அவர்களை புகழவோ குறைகூறவோ முடியாதவர்கலாகக் காணப்படுகிறார்கள். இவற்றை நாம் கீழ்வரும் பகுதிகளில் விபரமாகப் பார்ப்போம்.
பல்வேருபற்ற புதுமையின் வகைகள்
அல்லாஹ்வின் கிருபை உங்கள் மீது உண்டாகட்டும் மற்றும் இந்தப் புதுமை அல்லது வேறுபான்மை மூன்று வகையானது என நாம் அறிந்திருக்க வேண்டும்.
முதலாவது வகை
“அல்லாஹ்வையும் அவனது திருத்தூதரையும் (ஸல்) சரிவரப் பின்பற்றுபவர்கள். இந்தப் புதுமை அல்லது வேறுபற்றவர்கள் புகழுக்குரிய புதியவர்கள் ஆவர், ஏனெனில் இவர்களை அல்லாஹ்வும் அவனது இறைத்தூதரும் (ஸல்) புகழ்ந்து இருக்கிறார்கள். ஆகவே இப்படியான மக்களைத் தேடி அவர்களோடு அவர்களின் முயற்சிக்கு துணையிருக்க வேண்டும, மேட்குறிப்பிடப்பட்ட மக்கள் தாம் ஒரு வித்தியாசமானவர்கலான நிலைமைக்கு பல்வேறுபற்ற நேரத்தில், இடங்களில் அல்லது பல்வேறுபற்ற மக்களின் மத்தியில் தள்ளப்படுவார்கள். அப்படியாயின் இந்த அந்நியர்கள் உண்மையான அல்லாஹ்வின் விசுவாசிகள், ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வை சரிவர வணங்குபவர்கள் மற்றும் அவர்கள் நபியவர்களின் வாழ்க்கை வழிகாட்டலைத் தவிர மற்றொன்றையும் ஆதரிக்க மாட்டார்கள், மேலும் அவர்கள் நபியவர்கள் வழிகாட்டலுக்கு மாற்றமாக எதனையும் உதவிக்கு அழைக்க மாட்டார்கள். இப்படியான (வித்தியாசமான) மக்களே தமக்கு அதிகமான தேவைகள் இருந்த போதும் தம்மை மற்றைய மக்களிடம் இருந்து விலக்கிக் கொண்டவர்கள்.
மறுமை நாளில் நியாயத் தீர்ப்பு செய்யும் நேரத்தில் இந்த வித்தியாசமானவர்களைத் (அல்லாஹ்வையும் அவனது திருத்தூதரையும் (ஸல்) சரிவரப் பின்பற்றுபவர்கள்) தவிர மற்றைய அனைவர்களும் தாம் உலகில் யார் யாரை வணங்கினார்களோ அவர்களின் பின்னால் கூட்டமாகப் போய்க்கொண்டு இருப்பார்கள், அப்போது இந்த இந்த வித்தியாசமானவர்களிடம் (அல்லாஹ்வையும் அவனது திருத்தூதரையும் (ஸல்) சரிவரப் பின்பற்றுபவர்கள்) கேட்கப்படும் “மற்றவர்களோடு நீங்களும் போகமாட்டீர்களா? ” என்று! அதற்கு அவர்கள் “நாம் இந்த மக்களை எம் உலக வாழ்வில் புறக்கணித்தோம், எம் உலக வாழ்வில் இந்த மக்களின் தேவை எமக்கு இன்றைய நாளை விட அதிகமாகவே இருந்தது, எனவே நாம் யாரை நம்பி வணங்கினோமோ அந்த இறைவனுக்காக இப்போது நாம் காத்திருப்போம்” (புஹாரி – முஸ்லிம்) “மேலும் கூறின் இவர்களை உலகின் அனைத்து மக்களும் ஒதுக்கி கைவிட்டு விட்ட போதிலும் “இந்த “அந்நியன்” பற்றிய மற்றும் ஒரு ஹதீத் அனஸ் இப்ன் மாலிக் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது, அதாவது நபி ஸல் அவர்கள் மொழிந்தார்கள் ஒருவன் மிகவும் அலங்கோலமான புளுதி படிந்த நிலையிலும் தனக்கென்று அதிகமாக ஒரு சொத்தும் இல்லை என்ற நிலையில் மற்றைய மக்களின் கண்களுக்கு புலப்படாமல் போகலாம், இந்நிலையில் இம்மனிதன் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வானேயானால், இம்மனிதனின் பிரார்த்தனை அன்கீர்கரிக்கப்படும். (இது திர்மிதி இல் பதிவாகி உள்ளது,மற்றும் ஷேய்க் அல் அல்பானி இதனை ஆதாரபூர்வமாக்கி உள்ளார்)
ஒருமுறை அல்-ஹசன்-அல்-பஸ்ரி (ஒரு மார்க்க அறிந்ஞர் அவரின் இறைபக்திக்கும் உலக வாழ்வை துச்சமாக மத்தித்ததிலும் புகழ் பெற்றவர்) மொழிந்தார்கள்,
” ஒரு உண்மையான விசுவாசி இவ்வுலகத்திற்கு ஒரு அன்னியனே! இந்த அவமானத்திற்காக அவன் ஒருபோதும் பயப்பட மாட்டான், தான் இந்நிலையில் இருந்து மீண்டு தன்னை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று போட்டியிடவும் மாட்டான். இந்த மனிதனும் மற்றயவர்களும் வெவ்வேறு நிலைப்பாட்டிலேயே இருப்பார்கள். மற்றைய மக்கள் இவருடன் ஒத்துப் போவார்கள் இருப்பினும் கூட இம்மனிதன் தான் தன்னைப் பற்றிக் கவலைப் பட்டுக் கொண்டிருப்பார். (அதனால் களைத்தும் போயிருப்பார்)”
நபி (ஸல்) அவர்கள் இந்த அன்னியர்களைப் பற்றி அறிவிக்கும் போது, “மக்கள் நபியவர்களின் வழி முறைகளை விட்டு விலக்கியிருக்கும் போது இந்த அந்த்நியர்கள் நபியின் வாழ்க்கை வழி முறைகளை சரிவரப் பின்பற்றுபவர்களாக இருப்பார்கள், இந்த அன்னியர்கள், (பித்ஆ) மார்க்கத்தில் புதிதாக உண்டுபன்னபபட்டவைகள் மக்களால் சரளமாக பின்பற்றப்படும் போதும் இவைகளை விட்டும் விலகியிருப்பார்கள். இந்த மக்கள், உண்மையான மார்க்கம் மற்றயவர்களால் சீர்குலைந்து இருந்த போதும் தவ்ஹீதை (ஏகத்துவத்தை) பின்பற்றுபவர்களாகவும் தம்மை அல்லாஹ்வின் மற்றும் நபியின் பாதையில் இணைத்துக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள், இவர்கள் தம்மை ஒரு “ஷேய்க்” அல்லது “தரிக்கா” வாதி அல்லது ஒரு குறிப்பிட்ட “மத்ஹப்” வாதி என்று கூறிக் கொள்ள மாட்டார்கள்; மற்றும் இவர்கள் தம்மை அல்லாஹ்வுக்கு மாத்திரமே அற்பனித்தவர்களாகவும் இவர்கள் அல்லாஹ்வைத்தவிர மற்றொன்றையும் வணங்குபவர்களாகவும் இருக்க மாட்டார்கள், மேலும் இவர்கள் நபியின் வழி முறையை தவிர வேறொன்றையும் பின்பற்றவும் மாட்டார்கள். இந்த மக்களே ஹதீதில் எரிமலைக் குழம்பைப் பற்றிப்பிடித்துக் கொண்டவர்கள் என்று வர்ணிக்கப் படுபவர்கள். (இது சம்பந்தமான ஹதீத் பின்னால் வரும்) அதிகமான மக்கள், ஏன் அனைத்து மக்களும் இவர்களைக் குறை கூறினாலும் (மேற்குறிப்பிட்ட நபியவர்களின் வாசகத்தின் விளக்கம்) இவர்கள் நபியவர்களின் வழிகாட்டலுக்கு இணங்கவே இருப்பார்கள்.
இறைவன் அவனது தூதரை (ஸல்) மக்கள் பல்வேருபற்ற வேதங்களைப் பின்பற்றிக்கொண்டிருக்கும் போது உலகிற்கு அனுப்பினான், காரணம் மணிதர்கள் இறைவனுக்குப் பதிலாக அருவிகளையும், மரங்களையும் வணங்கினர் சிலர் சிலை வணக்கம் செய்தனர், சிலர் கிறிஸ்தவர்களாகவும், யூதர்களாகவும் மற்றும் சரத்துஸ்திர சமயத்தவராகவும் இருந்தார்கள். இவர்களின் மத்தியில் இஸ்லாம் முதலில் அறிமுகமானபோது இவர்களுக்கு இது ஒரு புதுமையாகவே இருந்தது. மேலும் இம்மக்களில் எவரேனும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு நபியவர்களின் (ஸல்) வழியைப் பின்பற்றினால் அப்படிப் பின்பற்றியவர்கள் அவர்களின் குடும்பத்தாரால் மற்றும் அவரின் கோத்திரத்தாரால் ஒதுக்கப்பட்டு விடுவார், இந்நிலைக்கு ஆளான மக்கள் அவர்களின் மக்களுக்கு மத்தியில் ஒரு அந்நியனாகவே வாழ்ந்தார்கள். ஒருகாலத்தில் இஸ்லாம் முழுமையாக வளர்ச்சியடைந்த போது, முஸ்லீம்களும் சக்தியடைந்தவர்களாக மாறினார்கள், எந்த அளவுக்கு என்றால் யார் முதலில் முஸ்லீம்களை அன்னியவர்களாக கருதினார்களோ அவர்கள் அவர்கள் அன்னியவர்களாகக் கருதப்படும் வரைக்கும்.
ஆனால் பரிதாபகரமாக சாத்தான் மீண்டும் இம்மக்களை இவர்களின் முன்னையோர்களைப்போல் வழிதவறச் செய்து விட்டான், இவர்களின் முன்னையோர்கள் ஒருகாலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருந்தார்கள் அவர்களும் சாத்தானால் வழிதவறப்பட்டார்கள், எனவே இஸ்லாம் மீண்டும் எப்படி ஒரு புதிய மதமாக ஆரம்பமானதோ அப்படியே ஒரு புதிய மதமாகக் காணப்பட்டது. நபியவர்கள் (ஸல்) எதிர்காலத்தில் இஸ்லாத்தின் நிலைமையை பற்றிக் கூறும் போது (நபித்தோழர்கள் கேள்விக்கு விளக்கம் அளிக்கும் போது, அதாவது நரக வேதனையில் இருந்து பாதுகாக்கப் பட்ட மக்கள் யார் என்றும் அவர்களின் குணாதிசயங்கள் எப்படியிருக்கும் என்ற கேள்விக்கு) இம்மக்கள் மற்றவர்கள் மத்தியில் அன்னியவர்களாகவே காணப்படுவார்கள் (இதனைத்தான் இப்ன்-அல்-கய்யும், அவர்கள் ஹிஜ்ரி 8 ஆம் நூற்றாண்டில் இந்தக் கட்டுரையில் எழுதினார்கள், இந்த நிலைமையை நாம் இன்று 6 நூற்றாண்டுகளுக்கு பின் எப்படி இருக்கும் என்று கற்பனை பண்ணிப் பார்த்தால் நாங்கள் வாழும் காலம் எப்படி இருக்கும்? – அல்லாஹ் எங்கள் அனைவரையும் பாதுகாப்பானாக)
ஒரு ஆதார பூர்வமான ஹதீதில், இந்தக்கூட்டத்தை பற்றித் தான் நபியவர்கள் கூறியுள்ளார்கள், “எனது உம்மாஹ்” எழுபத்தி மூன்று கூட்டங்களாக பிரிவுகளாக பிரிந்து போகும், அவை அனைத்துமே நரகைச் சென்றடையும் ஒரேயொரு பாதுகாக்கப்பட்ட கூட்டத்தைத் தவிர,…! ஏன் இந்த நரகில் இருந்து பாதுகாக்கப்பட்ட கூட்டம் மற்றைய அனைத்துக் கூட்டங்களின் மத்தியில் இந்த அன்னியவராகக் காணக்கூடிய கூட்டமான ஒரே ஒரு கூட்டமாக இருக்கக் கூடாது? இந்த அனைத்துக் கூட்டங்களும் ஒன்றைத் தவிர தாம் தமது உலக ஆசைகளின் பின்னாலும் அந்த ஆசைகளைத் தமது வணக்கமாகவும் ஆக்கிக் கொண்டுள்ளது , இந்தக் கூட்டத்தினரே தமது சுயநலனுக்காகவும் தமது உலக வாழ்க்கையின் ஆசைகளை கண்ணியப்படுத்திக் கொள்ளவும் தாங்களது போதனைகளில் சந்தேகங்களையும் மார்க்கத்தில் பித்ஆக்களையும் உண்டு பண்ணி வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு எந்தக் கூட்டம் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி நபியின் வாழ்வை பின்பற்றி நடந்து கொண்டிருக்கிறார்களோ இந்தக்கூட்டமே மற்றைய அனைத்துக் கூட்டங்களின் மத்தியில் ஒரு வித்தியாசமான அந்நிய கூட்டமாகும்.
இதனால் தான் ஒரு உண்மையான முஸ்லிம் யார் மக்களை நபியவர்களின் வழியைப் பின்பற்றுமாறுவலியுறுத்தி அழைக்கிறாரோ அவருக்கு ஐன்பது நபித்தோழர்களின் நன்மைகளை பரிசாக அளிக்கப்படுகிறது, நபித்தோழர்கள், நபி (ஸல்) அவர்களிடம்
”ஈமான் கொண்டவர்களே! (வழி தவறிவிடாமல் நீங்களே) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் நேர்வழியைப் பின்பற்றுவீர்களானால், வழி தவறியவர்கள் உங்களுக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது” (அல்-மாய்தா – 105 )
என்ற வசனத்தைப் பற்றிக் கேட்ட போது அவர்கள் கூறினார்கள், “ஆம் ஒரு போதும் தீங்கு விளைவிக்க முடியாது, நீங்கள் நன்மையை ஏவி தீமையை தடுத்துக் கொண்டிருங்கள், மக்கள் கருமித்தனத்திற்கும் உலக ஆசாபாசங்களுக்கும் அடிமையாகவும் இந்த உலகம் மறு உலகைவிட உயர்வாக மதிக்கப்பட்டும், ஒவ்வொரு மனிதனும் தனது அபிப்பிராயத்தையே வலியுறுத்திச் செயல்படும் வரைக்கும், அந்த சந்தர்ப்பத்த்கில் உங்களை மற்றவர்களின் வழியில் இருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். நிச்சயமாக உங்களுக்குப் பிறகு ஒரு பொறுமையாக இருக்க்கக்கூடிய காலம் வரும், அக்காலத்தில் பொறுமையாக இருப்பதென்பது கையில் தீக்குழம்பை ஏந்தியிருப்பது போலிருக்கும், அக்காலத்தில் யார் பொறுமையுடன் இருப்பாரோ அவர்களுக்கு அல்லாஹ் பொறுமையுடன் இருக்கும் ஐன்பது நபர்களின் நன்மைகளை அளிப்பான் என்று கூறினார்கள்….! அதனைக் கேட்ட நபித் தோழர்கள் இறைவனின் தூதரே அந்நபர்களின் ஐன்பது பேர்களின் நன்மையா…? எனக்கேட்ட போது…நபி (ஸல்) அவர்கள் இல்லை உங்களின் ஐன்பது பேர்களின் நன்மை என பதிலளித்தார்கள்.”
இந்த ஹதீத் திர்மிதீ அபூ தாவூத் கிரந்தங்களில் குறைந்த ஆதாரங்களுடன் பதிவாகியுள்ளது ஆனாலும் இதற்கு சார்பான ஆதாரங்களும் காணப்படுகிறது…! இமாம் அல்பானி இந்த ஹதீதை ஆதாரபூர்வமான ஹதீதாக அவர்களின் ஸஹிஹ் நூலில் இலக்கம் 947 இன் கீழ் பதிவாக்கி உள்ளார்.
எனவே ஒரு நன்பிக்கையாளன், அவனுக்கு அல்லாஹ் (சு.வ.தா) மார்க்க அறிவை அருட்கொடையாகக் கொடுத்து அந்நபர் அல்லாஹ்வின் கட்டளைகளை சரிவர விளங்கி இதனை மற்றயவர்களுக்கு போதிக்க தயராகுவாரேயானால்….அவர் தாமும் அவரின் கூட்டத்தாரிடையே ஒரு அந்நியனாக காணப்படுவார் என்பதை உணர்ந்து அதற்கு தம்மை பக்குவப்படுத்திக் கொள்வாராக, இது தனுக்கு முன்னாள் சென்ற தனது மூதாதையர்கள் யார் இஸ்லாத்தை சரிவர ஏற்றுக் கொண்டதால் இந்நிலைக்கு தள்ளப்பட்டார்களோ அதே போலாகும். உண்மையில் இந்நபர் தனது நம்பிக்கையில் ஒரு அந்நியரே காரணம் இவரின் கூட்டத்தார் தாங்களின் இறை நம்பிக்கையை சீர்குலைத்து விட்டார்கள் எனவே இவரின் மார்க்கத்தில் இவர், இவரின் கூட்டத்தாரோடு ஒப்பிடுகையில் ஒரு அந்நியரே….! இவரின் தொளுகைளின் முறையிலும் இவர் ஒரு அந்நியரே…காரணம் இவரின் கூட்டத்தார் நபியவர்களின் சரியான தொழுகை முறையை அறியாதவர்களாக இருப்பார்கள், எனவே இவரின் சரியான தொழுகை முறை அவர்களின் மத்தியில் ஒரு வித்தியாசமான தொழுகை முறையாகவே காணப்படும். மேலும் இந்நபர் நன்மையை ஏவி தீமையை தடுப்பதிலும் ஒரு அன்னியராகவே காணப்படுவார்….கரணம் மனிதர்கள் தீமைகளை நன்மையாகவும் நன்மையான காரியங்களை தீமை எனக் கருதி ஒதுக்கியும் இருப்பார்கள்….! சுருங்கச் சொன்னாள் இவர் இவ்வுலக வாழ்க்கை விடயங்கலானாலும் மறுவுலக வாழ்க்கை விடயங்கலானாலும் மற்றயவர்களோடு ஒப்பிடுகையில் ஒரு அன்னியவராகவே இருப்பார்
இரண்டாவது வகை
இதனை வாசிப்பவரே கேளும்…! இந்த இரண்டாவது வகையான வித்தியாசமானவர்கள் (அன்னியர்கள்)
யாரெனில் இவர்கள் சபிக்கக்பட வேண்டியவர்கள்…! காரணம் இவர்கள் பயங்கர பாவம் செய்யக் கூடியவர்கள், அறிவற்றவர்கள் மற்றும் மக்களிடையே கர்வமுடயவர்கலாகவும் இருப்பார்கள், இவர்கள் அன்னியமாக அல்லது வித்தியாசமாக காணப்படுவது தாம் இறைவன் காட்டிய வழி முறையை பின்பற்ற மறுப்பதாகும். இந்தப் புதுமை இஸ்லாத்தை சம்பூர்ணமாக ஏற்றுக் கொள்ள மறுப்பதின் புதுமையாகும், இவ்வாறு இது இவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்தாலும் ஒரு புதுமையாகவே இருக்கும். இந்தப புதுமை மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் மிகவும் பரவலாகவும் காணப்படும்.
இந்த மக்களே அல்லாஹ்விற்கு அந்நியமானவர்கள். அல்லாஹ் எங்களை இக்கூட்டத்தாரோடு சேற்று விடாமல் பாதுகாப்பானாக.
மூன்றாவது வகை
இந்த மூன்றாவது வகையான அன்னியவர்கள், சுருக்கமாக, புகழ்ச்சிக்குரியவர்லும் அல்ல இழிவுக்குரியவர்களும் அல்ல..! இது ஒரு பயணி தாம் பல்வேறு நகர்களுக்கிடையே கடந்து செல்லும் போது அனுபவிக்கும் அல்லது ஒரு மனிதன் தான் ஒரு குறிப்பிட்ட காலம் ஒரு பகுதியில் வசிப்பது போலாகும் காரணம் இவருக்கு நன்றாகத் தெரியும் இவர் தான் தனது பயணத்தின் போது இடைவெளியில் எந்த இடத்திலும் நிரந்தரமாக தங்க முடியாது காரணம் இவருக்கு நீன்ற ஒரு தூரத்தை சென்றடைய வேண்டும்.
இதை நாம் உணர்த்ந்தாலும் உணரா விட்டாலும் நாம் இந்த வாழ்க்கைக்கு அந்நியர்களே, நாம் நிச்சயமாக இந்த வாழ்க்கையை விட்டு நிரந்தரமான ஒரு மறுமை வாழ்கையை நோக்கிச் செல்லக்கூடியவர்களாக இருக்கிறோம்…! இதன் விளக்கத்தையே நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் இப்ன் உமர் அவர்களுக்கு பிவருமாறு கூறினார்கள்
“இந்த உலகில் நீர் ஒரு அந்நியரைப் போலவோ அல்லது வழிப்போக்கரைப் போலவோ இரும்” இவ்வாறு நாம் நபியவர்களின் (ஸல்) வாய்மொழியை சரிவர உணர்ந்து கொண்டு செயல்பட்டால் இந்த வகையைச்சார்ந்த அன்னியர்கள் ஒரு கண்ணியத்திற்குரிய மக்களாக வரக்கூடிய வாய்ப்புகள் நிறைய உள்ளது.
ஓ அல்லாஹ் எங்களை ஒரு முஸ்லீமாகவும், மார்க்க அறிவுள்ள வணக்கவாளியகவும் ஆக்கிவைப்பாயாக எனவே அல்லாஹ் நீ எங்களின் பிழைகளைப் பொறுத்துக் கொள்வாய் மற்றும் உனது பேரன்பைக் கொண்டு எங்களுக்கு நன்மாரயனமும் செய்வாய்.
உங்கள் இறைவன் இணையற்ற புகழ்ச்சிக்கும் அதி கண்ணியமும் சக்தியும் உடயவனுமாவான், அவனுக்கு ஒரு செயலைச் செய்ய யாரின் அனுமதியும் தேவை இல்லலை, இவை அல்லாஹ்வின் குணாதிசயங்கள் ஆகும். மற்றும் நபி பெருமானார் மீதும் மற்றைய அனைத்து நபிமார்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக
அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் நன்றியும் உண்டாகட்டும், அவனே சர்வலோகங்களுக்கும் அதிபதி.